இரண்டாவது திருமணத்தை விமர்சித்தவர்களுக்கு பிரியங்கா கடும் பதிலடி – விஜே பிரியங்கா மனம் திறந்த பேட்டி! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவரான விஜே பிரியங்கா, தனது காமெடி டைமிங் மற்றும் குறும்புத்தனமான பேச்சு முறை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். சமீபத்தில் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதை அடுத்து பலரும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், தற்போது அதற்கே அவர் நேரடியாக பதிலளித்துள்ளார்.

சூப்பர் சிங்கர் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் பிரியங்கா, பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். டைட்டிலை வெல்லாவிட்டாலும், தனது இயல்பான குணம் காரணமாக பாராட்டுகளைப் பெற்றார்.

பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்காத பிரியங்கா, சில மாதங்களுக்கு முன்பு வசி என்ற இளைஞரை மணந்தார். இருவருக்கும் வயது வித்தியாசம் இருப்பதால், சமூக ஊடகங்களில் சிலர் அவரை விமர்சித்தனர். இதை இதுவரை அமைதியாக எதிர்கொண்ட பிரியங்கா, தற்போது ஒரு தனியார் ஊடகத்துக்குத் தந்த பேட்டியில் தன் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது –“என் திருமணத்தின்போது சில யூடியூப் சேனல்கள் என் கணவர் பெரிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர், தீவு வாங்கி கொடுத்திருக்கிறார், 200 கோடி சொத்து இருக்கு என்று புனைவு கதைகளைப் பரப்பினார்கள். ஆனால் அதில் எதுவுமே உண்மை இல்லை. என் கணவர் வசி இலங்கை தமிழர்; அவரது குடும்பத்தினர் லண்டனில் வசிக்கிறார்கள், அவர் அங்கே ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார் – அதுதான் உண்மை.”

அதோடு,“நான் பணத்துக்காக திருமணம் செய்துகொண்டேன் என்று சிலர் சொன்னார்கள். நான் இத்தனை வருடங்களாக தொலைக்காட்சியில் உழைத்து வருகிறேன். என்னிடம் பணம் இல்லையா? இப்படிப் பொய்யான செய்திகளை பரப்புவது மிகவும் வருத்தமளிக்கிறது,”என்றும் கூறினார்.

இவ்வாறு, தனது திருமணத்தைச் சுற்றியுள்ள அனைத்து வதந்திகளுக்கும் முடிவுக் கட்டி, தனது வாழ்க்கை குறித்து திறந்த மனதுடன் பேசியுள்ளார் விஜே பிரியங்கா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Priyanka strong response to those who criticized her second marriage VJ Priyanka candid interview


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->