சிவகாசி: தெருநாய்கள் கடித்து 2959 பேர் காயம்... தமிழகம் முழுவதும் இதே நிலை தான்... பாஜக விடுத்த கோரிக்கை! - Seithipunal
Seithipunal



பாரதிய ஜனதா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சிவகாசி அரசு மருத்துவமனையில் மட்டும் கடந்த 19 மாதங்களில் தெருநாய்கள் கடித்து 2959 பேர் காயமடைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 

இதை தவிர தனியார் மருத்துவமனைகள், சிவகாசியை சுற்றியுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றவர்களின் விவரம் இல்லை எனும் நிலையில் தெரு நாய்களினால் ஏற்படும் ஆபத்து அளவிட முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. 

இது முழுக்க முழுக்க உள்ளாட்சி அமைப்புகளின் செயலற்ற தன்மையை உணர்த்துகிறது. தெருநாய்களுக்கான கருத்தடை முகாமை நடத்தாமல் இருப்பது அல்லது நடத்தியதாக கணக்கு காண்பிப்பது என அலட்சியப்படுத்தும் போக்கே உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி அதனடிப்படையில் தெருநாய்களின் தொல்லையிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது என்பதை உணர வேண்டும். 

தமிழகம் முழுவதும் இதே நிலை தான் உள்ளது என்பதும் கவலைக்குரியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sivakasi street dog issue DMK Govt Mk Stalin


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->