மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் புதிய திருப்பம் – வசமா சிக்கப்போகும் ரங்கராஜ்.. ஜாய் கிரிஸ்டா பேட்டி!
New twist in the Madhampatti Rangaraj case Rangaraj is about to be caught Joy Krista interview
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நம்பிக்கை துரோகம் செய்தார் என குற்றம்சாட்டி, ஜாய் கிரிஸில்டா போலீஸில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் பல பதிவுகள் மூலம் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். “எனக்கும் என் குழந்தைக்கும் நீதி வேண்டும், அவரே குழந்தையின் தந்தை,” என தொடர்ந்து கோரிக்கை வைக்கிறார்.
இதையடுத்து, பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகிய அவர், புகைப்படங்கள், செல்போன் உரையாடல்கள் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பித்து விசாரணையில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் இரண்டாவது முறையாக ஜாய் கிரிஸில்டா ஆஜராகினார். விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“இன்னும் விசாரணை முடியவில்லை. இது தொடர்ந்து நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை இருவரையும் மீண்டும் வரச் சொல்லி இருக்கிறார்கள். அன்றுதான் என்ன முடிவு வருகிறது என்பது தெரியும். நான் முதலில் எப்படிப் பதிலளித்தேனோ, அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன். இன்று மாதம்பட்டி ரங்கராஜும் ஆஜராகியிருந்தார், அவர் என்னிடம் பேசினார் — ஆனால் அவர் என்ன சொன்னார் என்பதை இப்போது சொல்ல முடியாது. வெள்ளிக்கிழமை இறுதி முடிவுக்குப் பிறகு அனைத்தையும் மீடியாவிடம் சொல்கிறேன்,” என்றார்.
மேலும், அனைத்து பெண்களுக்கும் உரையாற்றிய அவர்,“பெண்களுக்கு எந்தவொரு பிரச்சனை இருந்தாலும் தயங்காமல் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். நான் பல இடங்களில் புகார் கொடுத்தும் முடிவு வரவில்லை, ஆனால் இங்கு வந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது மற்ற பெண்களுக்கும் நம்பிக்கையளிக்கிறது,”
என்று தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்கள், “முன்பு நீங்கள் போலீஸில் புகார் அளித்தபோது தாமதம் ஏற்பட்டதாக சொன்னீர்கள். அதற்குக் காரணம் அரசியல் தலையீடு தானா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ஜாய் கிரிஸில்டா சுருக்கமாக “இருக்கலாம்” என பதிலளித்தார்.
மாநில மகளிர் ஆணையம் இருவரையும் மீண்டும் வெள்ளிக்கிழமை ஆஜராகச் சொல்லியுள்ள நிலையில், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை குறித்து அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
New twist in the Madhampatti Rangaraj case Rangaraj is about to be caught Joy Krista interview