சில நடிகர்கள் செட்டுக்கே வரமாட்டார்கள்! - இம்ரான் ஹாஷ்மியின் கூற்று பாலிவுட்டில் சர்ச்சை கிளப்பியது...! - Seithipunal
Seithipunal


பெண்கள் உரிமைகளை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் “ஹக்” திரைப்படத்தில் இம்ரான் ஹாஷ்மி மற்றும் யாமி கவுதம் இணைந்து நடித்துள்ளனர். சுபர்ண் எஸ். வர்மா இயக்கியுள்ள இந்தப் படம் நவம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் இம்ரான் கூறிய ஒரு கூற்று தற்போது இணையத்தில் பெரும் விவாதமாகி வருகிறது. யாமி கவுதம் எப்போதும் நேரத்துக்கு செட்டுக்கு வருவார் என அவர் பாராட்டியபோது, தொகுப்பாளர், “அப்படியா, இன்னும் சில நடிகர்கள் நேரத்துக்கு வரமாட்டார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சிரித்தபடி இம்ரான், “நேரத்துக்கு வருவது தூரம், சில நடிகர்கள் செட்டுக்கே வருவதில்லை!” என்று பதிலளித்தார்.அந்த ஒரே வரி பேச்சு இணையத்தில் மின்னல் வேகத்தில் வைரலாகி, ரசிகர்களும் ஊடகங்களும் “இம்ரான் யாரை குறிக்கிறார்?” என்ற கேள்வியில் திளைக்கின்றனர்.

சமீபத்தில் பவன் கல்யாணின் “ஓஜி” படத்தில் வில்லனாக மின்னிய இம்ரான் ஹாஷ்மி, இப்போது தனது நகைச்சுவை கலந்த கூற்றால் மீண்டும் பிரபலமாகியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Some actors wont even come set Emraan Hashmi statement sparks controversy Bollywood


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->