சிதைந்த சாலை... மிதமிஞ்சிய தடித்தனம்... பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட திமுக எம்பி தமிழச்சி!  - Seithipunal
Seithipunal


சென்னை வேளச்சேரி பகுதியில் சாலை மோசமான நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி, அப்பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற நபர் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதனை கவனித்த திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் (சுமதி), உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை சரி செய்யப்பட்டதாகவும், அதற்கான புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டார்.

ஆனால், அந்த புகைப்படத்தில் சாலை முழுமையாக சரி செய்யப்படாமல், உடைந்த செங்கற்கள், கட்டிடக் கழிவுகள் போன்றவை கொட்டப்பட்டு தற்காலிகமாக சரிசெய்யப்பட்டிருப்பது தெரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள், “தமிழச்சி தங்கபாண்டியன் வீட்டின் முன்பாக இதுபோல் கொட்ட அனுமதிப்பாரா?” என்ற கேள்வியுடன் கடுமையாக விமர்சித்தனர்.

மேலும், “இப்படி தற்காலிகமாக செங்கல் கொட்டியதையே சாலை சரி செய்ததாக எப்படி கூற முடியும்?” என்ற எதிர்ப்பும் சமூக வலைதளங்களில் பரவலாக எழுந்தது.

இந்த விமர்சனங்களை தொடர்ந்து தமிழச்சி தங்கபாண்டியன் தனது பதிவில் மன்னிப்பு கோரினார். “சாலை சரி செய்யப்பட்டதாக தெரிவித்தது எனது தவறாகும். அந்த சாலை முழுமையாக புதுப்பிக்கப்படும் வரை நான் நேரடியாக கண்காணிப்பேன்,” எனவும், “பணி நிறைவடைந்தவுடன் அதன் புகைப்படத்தையும் வெளியிடுவேன்,” எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Velacheri Road issue DMK MP Sumathi as tamilachi thangapandiyan apology


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->