சிந்து நதி நீர் ஒப்பந்த ரத்து நடவடிக்கை அமலில் இருக்கும்...! - இந்தியா - Seithipunal
Seithipunal


பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, ''ஆப்ரேஷன் சிந்தூர்'' பதிலடி தாக்குதல் கொடுத்த பின்னர், 4 தினங்களாக  நீடித்து வந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதல், நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான், தனது வான் பரப்பை திறந்துவிட்டு 'வெள்ளைக்கொடி' காட்டியது. ஆனால் தாக்குதலை நிறுத்திய இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமானதான ''சிந்து நதிநீர்'' ஒப்பந்தம் ரத்து என்ற முடிவை திரும்பப்பெறவில்லை.

இதுதொடர்பாக இந்தியா தரப்பில் தெரிவித்ததாவது, "பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டுவதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. ஏப்ரல் 23 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அறிவித்த நடவடிக்கைகள் அமலில் இருக்கும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், 'அட்டாரி-வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் மாற்றம் இல்லை' என்று தெளிவாக தெரியவந்துள்ளது.

இதைப்பற்றிய முடிவுகளை மே 12 ம் தேதி அதாவது நாளை, இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் வெளிவரும் என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Indus Water Treaty cancellation process will remain in effect India


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->