நம் நாடு என்ன செய்ய வேண்டுமென்று, வேறு நாடு சொல்கிறது...! இப்போது இந்திரா காந்தி இருந்திருந்தால்...? - காங்கிரஸ் - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதாக, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டார்.

இதைத்தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவின் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. மேலும் 1972 இந்தியா - பாக் போரில், பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் பாகிஸ்தானை இந்தியா வெற்றி பெற்றதையும் காங்கிரஸ் தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இதில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் 'கே.சி. வேணுகோபால்' வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"வளரும் நாடாக இருப்பதால், நமக்கு வலுவான முதுகெலும்பு உள்ளது. அனைத்து அட்டூழியங்களையும் எதிர்த்துப் போராட போதுமான விருப்பமும் வளங்களும் எங்களிடம் உள்ளன என்று எழுதினார்.

3-4 ஆயிரம் மைல்கள் தொலைவில் அமர்ந்திருக்கும் எந்த நாடும் இந்தியர்களுக்கு ஆர்டர்களை வழங்கக்கூடிய காலம் கடந்துவிட்டது. இந்தியா இன்று இந்திரா காந்தியை இழந்ததற்காக வந்துகிறது! என்று பதிவிட்டுள்ளார்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்:

.மேலும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ராமேஷ் வெளியிட்ட பதிவில், "இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்து இருப்பது வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்று" என்று தெரிவித்துள்ளார்.இதில், வெளிநாட்டு அழுத்தத்திற்கு பணிந்து போகாத இந்திரா காந்தி பேசிய காணொளிகளும் அவர் குறித்த பதிவுகளும் சமூக வலைதளங்களில் பலராலும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Another country is telling us what to do If Indira Gandhi were here now Congress


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->