அன்னையர் தினம் - CM ஸ்டாலின், TVK விஜய் வாழ்த்து!
Mothers day CM Stalin TVK Vijay wish
அன்னையர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் தாயார் தயாளு அம்மாளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
மேலும் அவரின் செய்திக்குறிப்பில், "மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அன்பின் மொழியை நம் அனைவருக்கும் அறிமுகம் செய்த அற்புதக் கடவுள்!
அன்னையின் தூய அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை இவ்வுலகில்!
தரணி போற்றும் நம் தாய்மார்கள் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த அன்னையர் தின நல்வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Mothers day CM Stalin TVK Vijay wish