பரபரப்பு... மணிப்பூரில் 11 பயங்கரவாதிகள் கைது.!!
11 terrorist arrested in manipur
கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாகவே மணிப்பூரில் குகி-மெய்தி இன குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதனால், அங்கு பொது அமைதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையை கட்டுப்படுத்த தவறியதால் முதலமைச்சர் பைரன் சிங் பதவி விலகியதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநிலம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள மேற்கு இம்பால், கக்சிங், பிஷ்ணுபூர், தொவுபால் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து நாச வேலைகளுக்கு சதி தீட்டுவதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் படி அந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் பெண்கள் உள்பட 11 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கிகள், தோட்டா குவியல்கள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
English Summary
11 terrorist arrested in manipur