பிக் பாஸ் தமிழ் சீசன் 9 – இந்த வாரம் வெளியேறப் போவது யார்? ரசிகர்கள் கணிப்பு வெளியானது!பிக் பாஸ் வீட்டின் ‘சண்டைக்கோழி’க்கு ஆப்பு
Bigg Boss Tamil Season 9 Who will be evicted this week Fans predictions are out The fighting chicken in the Bigg Boss house is a problem
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 — இந்த சீசன் ஆரம்பம் முதலே பெரிதாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காத நிலையில், இப்போது எலிமினேஷன் சுற்று தான் பார்வையாளர்களை சுவாரஸ்யத்தில் வைத்திருக்கிறது.
விஜய் டிவியில் கடந்த 8 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, முதல் ஏழு சீசன்களில் கமல்ஹாசனின் தொகுப்பில் சூப்பராக ஓடியது. ஆனால், கமல் விலகிய பின், விஜய் சேதுபதி தொகுப்பாளராக பொறுப்பேற்று, 8-வது மற்றும் தற்போது நடந்து வரும் 9-வது சீசனையும் முன்னெடுத்து வருகிறார்.
இந்த 9-வது சீசன், கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. ஆனால் தொடக்கத்திலிருந்தே நிகழ்ச்சி சற்று மந்தமாகச் சென்றது. ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு டிராமா, காமெடி, டாஸ்க் என எந்ததிலும் சுவாரஸ்யம் இல்லாததால், TRP கூட சரிந்தது.
பிக் பாஸ் குழுவும் இதை சரி செய்ய, பல புதிய டாஸ்க்களை கொண்டு வந்து முயற்சித்தது. சில சமயங்களில் வினோத் – திவாகர் ஜோடியின் செந்தில்-கவுண்டமணி ஸ்டைல் காமெடி ரசிகர்களுக்கு சிறு நிம்மதியை கொடுத்தது. ஆனால் கடந்த வாரம் விஜய் சேதுபதியே அவர்களை நேரடியாக “இது காமெடி இல்லை” என விமர்சித்ததால், இப்போது அந்த ஜோடியின் நகைச்சுவையும் சற்றே குறைந்திருக்கிறது.
பிக் பாஸ் விதிகளின்படி, ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் குறைந்த வாக்குகளைப் பெறும் போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். இதுவரை பிரவீன் காந்தி மற்றும் அப்சரா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வாரம், நாமினேஷனில் வியானா, பிரவீன் ராஜ், சுபிக்ஷா, துஷார், கலையரசன், ரம்யா ஜோ, அரோரா மற்றும் ஆதிரை ஆகியோர் இடம் பெற்றனர்.
இவர்களில் வியானா அதிகபட்ச வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக பிரவீன் ராஜ், சுபிக்ஷா, துஷார், மற்றும் கலையரசன் ஆகியோர் பாதுகாப்பான மண்டலத்தில் உள்ளனர்.
ஆனால், இறுதியில் ரம்யா ஜோ, அரோரா, மற்றும் ஆதிரை ஆகிய மூவரின் பெயர்களும் வெளியேற்றப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
வாக்கு எண்ணிக்கையின்படி பார்க்கும் போது, ஆதிரை தான் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புள்ள போட்டியாளர். அவரைவிட அரோரா சுமார் 2,000 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
ஆதிரை, பிக் பாஸ் வீட்டில் ஆரம்பம் முதலே சண்டை, தகராறு, கருத்து வேறுபாடு என்று பெரும் விவாதங்களில் ஈடுபட்டு வந்தவர். சிலருக்கு அந்த “சண்டைக் கோழி” தன்மை பிடித்தாலும், பலருக்கு அது எரிச்சலை ஏற்படுத்தியது.
இதன் விளைவாகவே, மக்கள் “போதும் ஆதிரை டிராமா!” என்று வாக்களிக்காமல், அவரை வெளியேற்ற முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
இப்போது ரசிகர்கள் மத்தியில் கேள்வி — “ஆதிரை வெளியேறினா, வீட்டில் அமைதி வரும் தானா? அல்லது இன்னொரு புதிய சண்டைக் கோழி வரப்போகிறாரா?” என்பதே!
English Summary
Bigg Boss Tamil Season 9 Who will be evicted this week Fans predictions are out The fighting chicken in the Bigg Boss house is a problem