ஐடிஐ மாணவருக்கு நேர்ந்த கொடூரம்! மின்சார தடையை சாதகமாக்கிய கொலையாளிகள்!
Trichy ITI student sleeping home killed slitting throat
திருச்சி, ஸ்ரீரங்கம் மேல்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னன். இவரது மகன் கோகுல் (வயது 19) இவர் திருவெறும்பூரில் உள்ள அரசு ஐடிஐயில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
கோகுல் நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று வீடு திரும்பி அவரது சகோதரர் மற்றும் குடும்பத்துடன் இரவு உணவு சாப்பிட்டு விட்டு அவரது படுக்கையறையில் தூங்கினார்.
திடீரென நள்ளிரவு 12 மணி அளவில் மின்சாரம் தடைபட்டதால் அண்ணன், தம்பி இருவரும் வீட்டின் கதவுகளை திறந்து வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டில் புகுந்த கொலையாளிகள் தூங்கிக் கொண்டிருந்த கோகுலின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதில் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். கோகுலின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த சகோதரர் மற்றும் குடும்பத்தினர் பார்த்தபோது கோகுல் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது கோகுல் மீது அடிதடி வழக்கு இருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகமடைந்து போலீசார் 3 பேரை பிடித்து ரகசியமான இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Trichy ITI student sleeping home killed slitting throat