திருச்சி: அதிகாலையில் கணவன்-மனைவியின் மரண ஓலம்.! துடித்துப்போன அக்கம் பக்கத்தினர்.! - Seithipunal
Seithipunal


திருச்சி அருகே வறுமை காரணமாக கணவனும், மனைவியும் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தில்லைநகர் பட்டாபிராமன் சாலை பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு வயது 51 ஆகிறது. இவர் திருச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி மகாலட்சுமி. இவருக்கு வயது நாற்பத்தி ஒன்பது ஆகிறது.

இவர்களுக்கு திருமணம் முடிந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லை. இதனிடையே ஊரடங்கு காரணமாக நடராஜனுக்கு போதிய வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்துவதற்கு முடியாமல் கஷ்ட்டப்பட்டு வந்துள்ளார். குழந்தை இல்லாததும் இந்த தம்பதியை வாட்டி வந்துள்ளது.

இதனால் விரக்தியடைந்த இந்த தம்பதிகள், இன்று தூங்கி எழுந்தவுடன் காலை 6 மணி அளவில் தங்களது வீட்டைப் பூட்டிக் கொண்டு, இருவரும் தங்களது உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்துகொண்டனர்.

இந்த தீ மளமளவென அவர்கள் உடம்பில் பற்றிக் கொண்டதால் வலி தாங்க முடியாமல் தம்பதியினர் இருவரும், வீட்டின் நான்கு மூலைகளிலும் கதறியபடி ஓடி உள்ளனர். தம்பதிகளின் இந்த மரண ஓலத்தை கேட்டு அருகிலிருந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

ஆனால் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதால், அவர்களின் உடலின் அருகே செல்ல முடியாமல், நெருப்பை அணைக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு துறை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் உயிருக்குப் போராடிய தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

90 சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் இருந்ததால் அவர்களை காப்பாற்ற முடியாமல் மருத்துவர்கள் போராடி வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இவர்களின் தற்கொலைக்கு வறுமை ஒன்று தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா? என்று அந்த பகுதியின் மக்களிடையே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy husband and wife suicide attempt


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal