விஜயின் கடைசி படம் ‘ஜன நாயகன்’...!- சாட்டிலைட் உரிமை பெற்ற சேனல் எது தெரியுமா...?
Vijay last film Jananaayagan Do know which channel acquired satellite rights
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட படம் ‘ஜன நாயகன்’. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த படம், அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, மேலும் மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இசையை அனிருத் ரவிச்சந்தர் அமைத்துள்ளார்.அரசியல் பயணத்தை முன்னிட்டு, விஜய் நடிக்கும் கடைசிப் படம் என சொல்லப்படுவதால், ‘ஜன நாயகன்’ மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான “தளபதி கச்சேரி”, “ஒரே பேரே வரலாறு” ஆகிய பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதும் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
அதேசமயம், ‘ஜன நாயகன்’ படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் கைப்பற்றியுள்ளதாக, தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்பாகவும், விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய ‘மெர்சல்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.கடைசி படமாகவும், அரசியல் பயணத்திற்கான தொடக்கமாகவும் பார்க்கப்படும் ‘ஜன நாயகன்’, விஜய் ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையனுபவமாக மாறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
English Summary
Vijay last film Jananaayagan Do know which channel acquired satellite rights