200 படங்களின் நினைவுகள் மட்டும் மிஞ்சின...! -மூத்த நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு...!
Only memories 200 films remain passing veteran actor Srinivasan
மலையாள திரைப்பட உலகின் பன்முகக் கலைஞரும் மூத்த நடிகருமான ஸ்ரீனிவாசன் (69) இன்று காலை காலமானார். நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த செய்தி வெளியாகியதும், மலையாள திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. சக நடிகர்கள், இயக்குநர்கள், திரைக்கலைஞர்கள் மட்டுமின்றி, திரையரங்க ரசிகர்கள் வரை பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் செய்திகளை பதிவிட்டு வருகின்றனர்.

நடிப்பைத் தாண்டி, திரைக்கதையாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு முகங்களை ஒருங்கே கொண்டவர் ஸ்ரீனிவாசன். சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தன் இயல்பான நடிப்பு மற்றும் சமூக உணர்வுமிக்க கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனங்களில் நிலைத்த இடம் பிடித்தார்.
அவரது கலைப் பங்களிப்பை பாராட்டி, தேசிய விருதுகள் மற்றும் கேரள அரசின் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மலையாள சினிமாவைத் தாண்டி, தமிழிலும் ‘புள்ளக்குட்டிக்காரன்’, ‘லேசா லேசா’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் தனிச்சிறப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைமேடையில் என்றும் உயிருடன் வாழும் ஸ்ரீனிவாசனின் மறைவு, இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளது.
English Summary
Only memories 200 films remain passing veteran actor Srinivasan