பாகிஸ்தானை உலுக்கிய திடீர் நிலநடுக்கம்...! - ரிக்டர் அளவில் 4.௧...!
sudden earthquake jolted Pakistan Measuring 4point1 Richter scale
பாகிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் பதிவானது. இந்திய நேரப்படி காலை 10.07 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, ரிக்டர் அளவுகோலில் 4.1 என பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தரையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதி, 33.39 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 72.28 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை பகுதியாக இருப்பதாக முதற்கட்டமாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் நில அதிர்வால் சில பகுதிகளில் மக்கள் அச்சமடைந்ததாக கூறப்பட்டாலும், இதுவரை உயிர் சேதம் அல்லது கட்டிட சேதம் குறித்த எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
sudden earthquake jolted Pakistan Measuring 4point1 Richter scale