சிக்சர் பந்தால் காயம்… கட்டியணைத்து நலம் விசாரித்த ஹர்திக்..! - கிரிக்கெட்டில் மனிதநேயம் - Seithipunal
Seithipunal


இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்து மாபெரும் இலக்கை நிர்ணயித்தது.

அதன்பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி, 201 ரன்களிலேயே ஆட்டம் முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்த பரபரப்பான போட்டியின் நடுவே ஒரு மனிதநேய தருணம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது. இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அடித்த அதிரடி சிக்சர், பவுண்டரி அருகே இருந்த கேமராமேன் மீது விழுந்தது.

இதில் அவரது கையில் லேசான காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஐஸ்பேக் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்த செய்தியை அறிந்த ஹர்திக் பாண்ட்யா உடனே கேமராமேனிடம் சென்று, அவரை கட்டியணைத்து நலம் விசாரித்தார்.

அதற்கு பதிலளித்த கேமராமேன்,“அதிர்ஷ்டவசமாக கையில் தான் பட்டது… கொஞ்சம் மேலே பட்டிருந்தால் கஷ்டம் தான்!” என சிரித்தபடி தெரிவித்தார்.

இந்த மனிதநேய தருணத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ஹர்திக் பாண்ட்யாவின் விளையாட்டு மனப்பான்மைக்கும் மனிதநேயத்திற்கும் ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Injured by sixer ball Hardik hugged and inquired about his well being Humanity cricket


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->