கோலாகலமான நடந்த அர்ஜுன் டெண்டுல்கர் திருமணம்; தல தோனி தரிசனம்; காதலியுடன் கலந்துகொண்ட ப்ரித்வி ஷா; சாரா டெண்டுகரின் நடன வீடியோ வைரல்..!
Prithvi Shaw attended Arjun Tendulkars lavish wedding with his girlfriend
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், பிரபல தொழிலதிபர் ரவிகாயின் பேத்தியும், தொழிலதிபருமான சானியா சந்தோக்கிற்கும் நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் 13, 2025 அன்று மும்பையில் உள்ள ரவி காயின் இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மிகவும் ரகசியமாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அவர்களது திருமணம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதனையடுத்து நடைபெறும் திருமண விழாவில் கிரிக்கெட் வீரர்கள், திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன், சி.எஸ்.கே அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோணி , மனையுடன் கலந்துகொண்டுள்ளார். அந்த புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகியுள்ளது. அத்துடன், சாரா டெண்டுல்கர் தனது தம்பியுடன் ஆடிய நடனமும் வைரலாகியுள்ளது.
இந்நிலையில், அர்ஜுன் டெண்டுல்கரின் திருமணத்தில் கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா காதலியுடன் கலந்துகொண்டார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர் அம்பானி குடும்பத்தினர், முன்னாள் உலக அழகி, ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் மற்றும் ஏனைய முக்கிய பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.
இந்த திருமண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Prithvi Shaw attended Arjun Tendulkars lavish wedding with his girlfriend