தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை நடத்த தடை; தமிழக அரசு உத்தரவு..!
Tamil Nadu government orders ban on holding political and religious events in private schools
தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டியுள்ளது.
தனியார் பள்ளிகளில் மதம் தொடர்பான பிரச்சாரங்களோ அல்லது அரசியல் கூட்டங்களோ நடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்த நிலையில் தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
மாணவர்களிடையே கசப்புணர்வை உருவாக்கும் வகையிலோ, மதவாதத்தைத் தூண்டும் வகையிலோ அல்லது குறிப்பிட்ட சாதி, இனம், மொழி அடிப்படையில் எந்தச் நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடத்தக்கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், கலாச்சார விழாக்கள், ரத்த தான முகாம்கள் மற்றும் சமூக சேவை தொடர்பான நிகழ்ச்சிகளைப் பள்ளிகளில் நடத்தலாம் என்று அறிவித்துள்ளது. ஆனால், அவை மதச்சார்பற்ற முறையிலும், எந்தவொரு அரசியல் சாயமும் இல்லாமலும் நடத்தப்பட வேண்டும் என்று கூரப்பப்ட்டுள்ளது.
மேலும், இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன்னதாக உரிய அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெறவேடனும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
English Summary
Tamil Nadu government orders ban on holding political and religious events in private schools