குடும்ப தலைவிகளுக்கு இன்ப அதிர்ச்சி; தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 5 ஆயிரம் ரூபா; ஆளுநர் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 05 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. 

தேர்தலையொட்டி, தமிழ்நாடு, புதுவையில் ஆளும் கட்சியினர் பொதுமக்களுக்குபல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றனர். அதன்படி, கடந்த பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கியது. அதேபோன்று புதுச்சேரியில் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், பா. ஜனதா கூட்டணி அரசு, ரேஷன் கார்டுக்கு ரூ.03 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கியது.

அத்துடன், குடும்ப தலைவிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர உரிமைத் தொகை, தேர்தல் அறிவிப்பு வெளியானால் தடைபடும் என்பதற்காக 03 மாதத்திற்கான தொகை மற்றும் கோடைக்கால நிவாரணமாக ரூ0.2.ஆயிரம் சேர்த்து ரூ.05 ஆயிரம் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் தமிழ்நாடு அரசு செலுத்தியது.

இந்த நிலையில் புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி ஆளுநரை சந்தித்து, புதுச்சேரி குடும்ப தலைவிகளுக்கும் 02 மாதங்களுக்கான நிதியை முன் கூட்டியே வழங்க கோரிக்கை வைத்தார்.  

இதனையடுத்து ஆளுநர் கைலாஷ்நாதன் தனது முகநுாலில், ''புதுச்சேரி மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள (சிகப்பு ரேஷன் கார்டு) 63 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு, அவர்களின் குடும்ப தேவைகளை கருத்தில் கொண்டு அடுத்த 02 மாதங்களுக்கான மாதாந்திர நிதியுதவி (மாதம் ரூ.2,500 வீதம்) மொத்தம் ரூ.05 ஆயிரம் வழங்கப்பட உள்ளது என அறிவிப்பை வெளியிட்டார்.

ஆளுநரின் இந்த அறிவிப்பு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும் என புதுச்சேரி அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Following Tamil Nadu Puducherry also offers Rs 5000 to heads of households


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->