திமுக ஆட்சிக்கு துணை போன கேடு கெட்ட கட்சிகள் உங்க ஆட்சிக்கும் உலை வைக்கும்... முதல்வர் விஜய்க்கு பாஜக வார்னிங்!
BJP Narayanan Thirupathy Condemn to tvk Govt and DMK
பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர, நாராயணன் திருப்பதி விடுத்துள்ள அறிக்கையில், "கோவையில் 10 வயது குழந்தையை கடத்தி , பாலியல் பலாத்காரம் செய்து கொன்று குவித்த கொடூரம் நடந்துள்ளது பெரும் சோகம்.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது இருப்பது தமிழகத்தை கடந்த கால திமுக ஆட்சி எந்த அளவிற்கு சீரழித்து விட்டு போயிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஆட்சிக்கு வந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் தவெக அரசு சட்ட ஒழுங்கு விவகாரத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
இரு நபர்கள் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது என்கிற நிலையில்,, இது போன்ற சம்பவங்களுக்கு மிக முக்கிய காரணம் அளவுக்கதிகமான மது போதையும், போதை பொருள் புழுக்கமும் தான் என்பதை ஒவ்வொரு குற்றச்சம்பவங்களின் பின்னணியிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
மது கூடங்களை அதிகரித்து இளைஞர்களை அதிக மது பழக்கத்திற்கு ஆளாக்கிய பெரும் பாவத்தை திமுக அரசு செய்தது என்பதோடு, போதை பொருள் புழக்கத்தை தடுக்க முடியாத கையாலாகாத அரசாக விளங்கியது திமுக .
ஆனால், அதையெல்லாம் கேட்காது அமைதி காத்ததோடு, அதற்கு வக்காலத்து வாங்கி, முட்டுக்கொடுத்த கேடு கெட்ட செயலை காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் செய்து வந்தன.
அந்த கட்சிகள் தான் தற்போதைய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு விசிக, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாகியுள்ளது இந்த அரசுக்கு பெரும் கெட்ட பெயரை, அவமானத்தை உண்டாகியுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் ஜோஸப் விஜய் அவர்கள் சிறிதும் தாமதிக்காமல் சட்ட ஒழுங்கை நிலை நாட்டி, குற்றங்களை தடுக்க ஆவன செய்ய வேண்டும். இல்லையேல் கடந்த ஆட்சிக்கு துணை போன கேடு கெட்ட கட்சிகள் அந்த ஆட்சிக்கும் உலை வைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan Thirupathy Condemn to tvk Govt and DMK