விதைத்த கொள்கை வீண் போகாது...விஜய்யின் அரசியல் நகர்வை பாராட்டி தள்ளிய மாரி செல்வராஜ்...! - இணையத்தில் வைரல்...!
policy sown not go vain Mari Selvaraj praised Vijay political move and rejected it Viral internet
விஜய் தலைமையிலான தமிழக அரசின் அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜஹான் ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் இருவருக்கும் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.இதன்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷாஜஹான் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு சமூகநீதித் துறை அமைச்சராக பதவியேற்றார். கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் முதல்-அமைச்சர் விஜய்க்கும், புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கும் தனது வாழ்த்துகளை சமூக வலைத்தள பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சமூகநீதியின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், தனது முதல் அமைச்சரவையை கூட்டணி அமைச்சரவையாக வடிவமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “புதிய தலைமுறை அரசியலை பிரதிபலிக்கும் வகையில் இந்த அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள இளம் தலைமுறை அமைச்சர்கள், பட்டியலின மற்றும் சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், மேலும் பெரிய இலக்குகளை நோக்கி இணைந்துள்ள கூட்டணி கட்சி அமைச்சர்கள் அனைவருக்கும் எனது அன்பும் வாழ்த்துகளும். மக்கள் சேவையில் இவர்களின் செயல்பாடுகள் சிறக்கட்டும்” என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
policy sown not go vain Mari Selvaraj praised Vijay political move and rejected it Viral internet