த்ரிஷ்யம் 3 விமர்சனம்: ரசிகர்களை மிரள வைத்த த்ரிஷ்யம் 3!மோகன்லால் மாஸ்டர் ஆக்டிங்!கடைசி 40 நிமிடம் வேறலெவல்! - Seithipunal
Seithipunal


மலையாள சினிமாவின் மிகவும் வெற்றிகரமான த்ரில்லர் தொடரான த்ரிஷ்யம் மீண்டும் ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள த்ரிஷ்யம் 3 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

மூன்றாவது பாகத்துடன் கதைக்கு முடிவு கட்டிவிடுவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, “இன்னும் பல பாகங்கள் எடுக்க முடியும்” என்பதை ஜீத்து ஜோசப் நிரூபித்துள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.

குறிப்பாக படத்தின் கடைசி 40 நிமிடங்கள் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு சென்றதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

மோகன்லால், மீனா, ஆஷா சரத், அன்ஷிபா, எஸ்தர் அனில் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் எதிர்பாராத திருப்பங்களால் பரபரப்பை கூட்டுகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“முதல் பாதி ஸ்லோவாக சென்றதால் படம் ஆரம்பிக்கவே இல்லையோ என்று தோன்றியது. ஆனால் இரண்டாம் பாதியில் எல்லா முடிச்சுகளையும் ஜீத்து ஜோசப் அசத்தலாக அவிழ்த்திருக்கிறார். கடைசி வரை சஸ்பென்ஸ் குறையவே இல்லை” என்று பலர் பாராட்டியுள்ளனர்.

தமிழகத்தில் தமிழ் டப்பிங் பதிப்பைப் பார்த்த ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர். “மீண்டும் ஒரு முறை ஜீத்து ஜோசப் – மோகன்லால் கூட்டணி ஏமாற்றவில்லை” என்ற கருத்துகள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

த்ரிஷ்யம் தொடரின் அடிப்படை கதைக்களம் போலவே, இந்த முறையும் தனது குடும்பத்தை பாதுகாக்க ஒரு சாதாரண மனிதன் எவ்வாறு புத்திசாலித்தனமாக சிக்கல்களை சமாளிக்கிறார் என்பதே படத்தின் மையமாக உள்ளது.

முதல் பாகத்தில் சினிமா அறிவை பயன்படுத்திய ஜார்ஜ்குட்டி, இரண்டாம் பாகத்தில் புத்தகத்தின் மூலம் தப்பித்தார். இந்த மூன்றாம் பாகத்திலும் புதிதாக ஒரு சாமர்த்தியமான யுக்தியை இயக்குநர் பயன்படுத்தியிருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

அதேநேரத்தில், சிலர் கலவையான விமர்சனங்களையும் பகிர்ந்துள்ளனர்.

“முதல் இரண்டு பாகங்களைப் போல இந்த பாகம் முழுமையாக ஈர்க்கவில்லை. முதல் பாதி மிகவும் மெதுவாக இருந்தது. இரண்டாம் பாதி மட்டும் தான் படத்தை காப்பாற்றுகிறது” என்று சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் பெரும்பாலான பார்வையாளர்கள், “கடைசியில் 4-வது பாகத்திற்கும் லீடு கொடுத்திருப்பது ஆச்சரியமாக இருந்தது” என கூறி வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான பேட்ரியாட் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், த்ரிஷ்யம் 3 மோகன்லாலுக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமையும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drishyam 3 Review Drishyam 3 left the fans in awe Mohanlal masterful acting The last 40 minutes are different


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->