“நான் கமல் ஹாசன் பொண்ணே இல்லை!” என் பேரு பூஜா!' - ஸ்ருதி ஹாசன் சொன்ன சீக்ரெட்!
I am not Kamal Haasan daughter My name is Pooja Shruti Haasan secret
உலகநாயகன் கமல் ஹாசனின் மகளாக பிறந்தாலும், அந்த அடையாளத்திலிருந்து தப்பிக்க சிறுவயதில் பல முயற்சிகள் செய்ததாக நடிகை ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த சம்பவம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இன்று நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பல துறைகளில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள ஸ்ருதி ஹாசன், சிறுவயதில் “கமல் ஹாசன் மகள்” என்ற பெயரே தனக்கு ஒரு அழுத்தமாக இருந்ததாக கூறியுள்ளார்.
சென்னையில் எங்கு சென்றாலும் மக்கள் தன்னை பார்த்து “இது கமல் ஹாசன் பொண்ணு” என்று அடையாளப்படுத்துவார்கள். ஆனால், “எனக்கும் தனியாக ஒரு பெயர் இருக்கிறது, நான் ஸ்ருதி” என்று சொல்ல வேண்டும் போல தோன்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், யாராவது “நீ கமல் ஹாசன் மகளா?” என்று கேட்டால், “இல்லை… என் பெயர் பூஜா ராமச்சந்திரன். என் அப்பா டாக்டர் ராமச்சந்திரன்” என்று நம்பிக்கையுடன் பொய் சொல்லிவிடுவாராம்.
இந்த சம்பவத்தின் சுவாரஸ்யமான பகுதி என்னவென்றால், அந்த “ராமச்சந்திரன்” என்பவர் வேறு யாருமல்ல; ஸ்ருதிக்கு பல் சிகிச்சை அளித்த டென்டிஸ்ட் மருத்துவர்.
தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே அப்போது இப்படி பேச வைத்ததாக அவர் பின்னர் பகிர்ந்துள்ளார்.
அந்த காலத்தில் சென்னையின் பல இடங்களிலும் கமல் ஹாசனின் புகழ், போஸ்டர்கள், ரசிகர் வரவேற்பு என இருந்ததால், சாதாரணமாக வாழவே முடியாத சூழல் இருந்ததாகவும் ஸ்ருதி குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் கமல் ஹாசன் மற்றும் நடிகை சாரிகா பிரிந்த காலத்தில், ஸ்ருதி மும்பைக்கு சென்றார். அங்கு தான் தன்னை தனி மனிதராக பார்க்க மக்கள் தொடங்கியதாகவும், அந்த சூழல் தான் தனது சுய அடையாளத்தை உருவாக்க உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்று அதே ஸ்ருதி ஹாசன், “கமல் ஹாசன் என்ற பெயர் இல்லாத ஒரு ஸ்ருதியை என்னால் கற்பனை கூட செய்ய முடியாது” என்று பெருமையுடன் கூறுகிறார்.
சிறுவயதில் அப்பாவின் புகழிலிருந்து தப்பிக்க முயன்ற அந்த சிறுமி, இன்று தனது திறமையால் இந்திய சினிமாவில் தனி இடம் பிடித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
English Summary
I am not Kamal Haasan daughter My name is Pooja Shruti Haasan secret