எல்லையில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் தாக்குதல் நடத்தும் தாய்லாந்து; சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ள கம்போடியா..! - Seithipunal
Seithipunal


கம்போடியா எல்லையில்பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் தாய்லாந்து மீண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கைகள் சர்வதேச விதிமுறைகளை கடுமையாக மீறும் செயல் எனவும், தாக்குதலை நிறுத்த சர்வதேச சமூகம்  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்போடியா கோரிக்கை வைத்துள்ளது.

நுாறாண்டுகளுக்கும் மேலாக, தாய்லாந்து - கம்போடியா இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருகின்ற நிலையில், கடந்த ஜூலையில் மோதலாக வெடித்தது. தொடர்ந்து ஐந்து நாட்கள் நீடித்த மோதலில் இரு தரப்பிலும் 43 பேர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் மற்றும் மலேஷிய அதிபர் அன்வர் இப்ராஹிம் முயற்சியால், அக்டோபரில் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இதனையடுத்து, கடந்த டிசம்பர் 07-ஆம் தேதி நடந்த மோதலில் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் மீண்டும் இரு நாடுகளுக்கிடையே சண்டை தொடங்கியுள்ளது. குறித்த மோதல் ஒரு வாரமாக மோதல் நீடித்து வரும் நிலையில், இரு தரப்பிலும் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னர், தாய்லாந்து- கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில், தற்போது கம்போடியா எல்லையில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் இடங்களில், தாய்லாந்து மீண்டும் கனரக பீரங்கிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படுவதாக கம்போடியா புகார் அளித்து வருகிறது.

இது குறித்து கம்போடியாவின் தகவல் துறை அமைச்சர் நெத் பீக்ட்ரா கூறியதாவது: இந்த தாக்குதல் நடவடிக்கைகள் ஐ.நா. சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களாகும். இந்த ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை கம்போடியா கடுமையாகக் கண்டிக்கிறது.

கம்போடியா மீதான தாய் ராணுவத்தின் தாக்குதல்களை நிறுத்த சர்வதேச சமூகம் உடனடி மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.'' என்று கம்போடியா அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cambodia calls on the international community to stop Thailand from launching attacks on the border


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->