நெல்லையில் பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..!
Chief Minister MK Stalin inaugurated the Porunai Museum in Nellai
நெல்லை ரெட்டியார்பட்டியில் பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இந்த பொருநை அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பொருநை அருங்காட்சியகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் கட்டிடத்தில் 1,585 பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கொற்கை கட்டிடத்தில் பாண்டியர்களின் கடல் வணிகம், முத்துக்குளித்தல் தொடர்பாக பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிவகளை கட்டிடத்தில் 5,300 ஆண்டுக்கு முந்தைய இரும்பு உருக்கும் தொழில்நுட்பம், நெல் மணிகள், பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், தமிழர்களின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை நிலங்களின் வாழ்வியலை 5டி திரையரங்கில் காணலாம். இந்த பொருநை அருங்காட்சியகத்தில் கடல் வழி வணிகம், முத்துக்குளித்தல் போன்றவற்றை திரைப்பட பாணியில் 3டி தொழில்நுட்பத்தில் காணமுடியும்.
மேலும், பண்டைய தமிழர்களின் பாரம்பரிய முறையில் முற்றம் தாழ்வாரம் அமைத்து பொருநை அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு திறந்தவெளி திரையரங்கு, மூலிகை தோட்டம், கைவினைப்பொருட்கள் விற்பனை விற்பனையகம் உள்ளது.
இன்று திறப்பு விழா கண்ட பொருநை அருங்காட்சியகத்தின் சிறப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதனையம் நீங்கள் கீழே பார்க்கலாம்.
English Summary
Chief Minister MK Stalin inaugurated the Porunai Museum in Nellai