வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட பயணியை தாக்கிய விமானியை சஸ்பெண்ட் செய்துள்ள ஏர் இந்தியா..!
Air India has suspended the pilot who assaulted a passenger involved in an argument
டில்லி விமான நிலையத்தில் பயணியை தாக்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி வீரேந்திர சேஜ்வால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
டில்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அங்கித் திவான் என்பவர் தனது மனைவி, 07 வயது மகள் மற்றும் 04 மாத குழந்தையுடன் பாதுகாப்புச் சோதனைகளில் இருந்துள்ளார். அப்போது 04 மாத குழந்தையை அவர் ட்ராலி ஒன்றில் வைத்தபடி நின்றிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த விமான நிலைய ஊழியர்கள், அங்கித் திவானையும், அவரின் குடும்பத்தினரையும் உரிய பாதுகாப்பு பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அப்போது அவர், வரிசையில் சிலர் நிற்பதாக கூறிய நிலையில், அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பணியில் இல்லாத விமானி வீரேந்திர சேஜ்வால் இது குறித்து ஆட்சேபித்துள்ளார். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் ஒரு கட்டத்தில் அதிகரிக்க குறித்த விமானி, பயணி அங்கித் திவானை தாக்கியுள்ளார். அவர், ரத்தம் வழிய தம் குடும்பத்தின் கண் முன்னே நடந்த இந்த சம்பவத்தை அங்கித் திவான் தமது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது சமூக வலை தளங்களில் இந்த வீடியோ பரவலாக விமர்சிக்கப்பட்ட நிலையில், பயணியை தாக்கியதாக வீரேந்திர சேஜ்வாலை தற்காலிகமாக பணிநீக்கம் செய்து ஏர் இந்தியா விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், இந்த செயலை கண்டிப்பதாக கூறிய விமான நிறுவனம், துறை ரீதியான விசாரணை முடியும் வரை விமானியின் சஸ்பெண்ட் நடவடிக்கை தொடரும் என்று கூறியுள்ளது.
English Summary
Air India has suspended the pilot who assaulted a passenger involved in an argument