ரோஸ், நீலம், மஞ்ச., 3 நம்பரில் கோடிஸ்வரன்., சற்றுமுன் திருச்சியில் அதிரடியாக ஆறு பேர் கைது.!  - Seithipunal
Seithipunal



திருச்சி பொன்மலை இரயில் நிலையம் அருகே உள்ள வெங்கடேஸ்வரா நகர் காட்டுப்பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள மளிகை கடை ஒன்றில் லாட்டரி சீட்டு கேட்டு பலரும் வந்து வாங்கி செல்வதாக கூறப்படுகிறது. 

பொன்மலை, அரியமங்கலம், திருவெறும்புதூர் காவல் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், இது குறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது. 3 ஆம் நம்பர் லாட்டரி சீட்டுகள் ரூ.30 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

மஞ்சள், ரோஸ், நீலம் ஆகிய நிறங்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு, அதன் வாயிலாக ரூ.10 ஆயிரம் வரை பரிசு தொகை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ரூ.60 சீட்டு வாங்கினால் ரூ.60 ஆயிரம் லாட்டரி பரிசு தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது. 

ராஜ் என்ற துரைராஜ் தலைமையில் மளிகை கடையில் இருந்து லாட்டரிக்கு முதலில் தகவல் பரிமாறப்பட்டு, பின்னர், அங்குள்ள காட்டுப்பகுதியில் அழைத்து சென்று லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகிறது. 

இந்நிலையில், இது சம்மந்தமான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பரவவே, திருச்சி போலீசார் சற்றுமுன் 6 பேரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

trichy 3 no lottery seettu issue


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->