டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரம்.. "திமுகவின் முக்கிய புள்ளியுடன் விசாரணை நபர்" இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! உண்மை என்ன?! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டபேரவையில் இன்று பட்ஜெட் மீதான மூன்றாவது நாள் விவாதம் நடைபெற்று வந்தது. அப்போது, தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தமிழக சட்ட சபையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 

அப்போது பேசிய அவர், "டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இந்த முறைகேடு விவகாரம் தேர்வர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று பேசினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "காரைக்குடியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 615 பேர் தேர்ச்சி பெற்றது குறித்து தேர்வு மைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னதாக இதுபோன்ற ஒரே மையத்தில் எழுதியவர் தேர்ச்சி பெற்றுள்ளனரா? என்று ஒப்பிட்டு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டின்பிஎஸ்சி நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது" என்று விளக்கம் அளித்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தின் பிரபல செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டதாக ஒரு புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களின் வைரலாகி வருகிறது.

அதில், "டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேடு தொடர்பாக இன்று பத்து பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது" என்று ஒரு விசாரணை நபரின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்த புகைப்படத்துடன் விசாரணை நடைபெறும் நபர்களில் ஒருவரின் புகைப்படமும், அந்த நபர் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உடன் இருக்கும் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த இரு புகைப்பங்களையும் வெளியிட்டு, 'டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஆளும் காட்சியனருக்குத் தொடர்பு இருக்குமோ? என்ற தலைப்புடன் சந்தேகம் எழுப்பி நெட்டிசன்கள், அதிமுக, பாஜகவை சேர்ந்தவர்கள் சமூகவலைத்தளங்களின் பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNPSC issue investigate inmate photo with appavu gone viral


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->