மார்க்சிஸ்ட் கட்சியின் அதிரடி: கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும்...! - பெ.சண்முகம் பேட்டி
Marxist Party Bold Move We Demand More Seats Than Last Time P Shanmugam Interview
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே மூன்றாம் கட்ட தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலை விட கூடுதல் தொகுதிகளைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளைக் குறைத்துக்கொள்ளுமாறு திமுக கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அதை ஏற்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கூடுதல் தொகுதிகள் குறித்த கோரிக்கையை முதலமைச்சரிடம் ஆலோசித்துவிட்டு இன்று இரவு தெரிவிப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படும் என நம்புவதாகத் தெரிவித்த அவர், வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளதால் தொகுதிப் பங்கீட்டை நிதானமாக இறுதி செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.
English Summary
Marxist Party Bold Move We Demand More Seats Than Last Time P Shanmugam Interview