நெல்லை அருகே கோரம்: நடுரோட்டில் எரிந்த நிலையில் கார்...! - 4 சடலங்கள் மீட்பால் பெரும் பரபரப்பு!
Horror Near Nellai Car Found Burning Middle Road Sensation Four Bodies Recovered
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டைக் குளம் பகுதியில், ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையோரம் கார் ஒன்று முற்றிலும் எரிந்த நிலையில் கிடப்பதாக இன்று காலை காவலர்களுக்குத் தகவல் கிடைத்தது.

இந்தச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வள்ளியூர் டிஎஸ்பி வெங்கடேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.
முற்றிலும் எரிந்த நிலையில் இருந்த அந்தக் காருக்குள், அடையாளம் காண முடியாத அளவிற்கு நான்கு சடலங்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன.
அந்தச் சடலங்களை காவலர்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தடய அறிவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதில் உயிரிழந்தவர்கள் யார்? இது விபத்தா அல்லது கொலையா? என்பது குறித்துக் காரின் இன்ஜின் மற்றும் பதிவு எண்களைக் கொண்டு காவலர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Horror Near Nellai Car Found Burning Middle Road Sensation Four Bodies Recovered