விபத்து ஏற்பட்டால், நீங்களே பொறுப்பு - புதிய விதி!
TNEB Warn to staffs for safety issue
மின்வாரிய பணியாளர்கள் பணியின்போது பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் பணியாற்றி விபத்து ஏற்பட்டால், அதற்க்கு அவர்களே பொறுப்பு என்று, தமிழகத்தின் அனைத்து மின்வாரிய அலுவலகங்களுக்கும் மின்வாரிய முதன்மை என்ஜினீயர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், "மின்சார வாரியத்தில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாதது, தேவையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் பணிகளை மேற்கொள்வது, முறையான கண்காணிப்பு இல்லாமல் வேலை செய்வது, ஏபி சுவிட்சுகளில் திறந்திருக்கும் பிளேடுகளை சரிபார்க்காமல் இருப்பது உள்ளிட்டவற்றால் விபத்துகள் ஏற்படுகிறது.

இதனால் அனைத்து பணியாளர்களும் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பணியாளர்களால் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு, தளத்தில் உள்ள மேற்பார்வை ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாட்டை சரி பார்த்து, பணியாற்ற வேண்டும்.
பணியாளர்கள் பணியின்போது எர்த்ரோட் பயன்படுத்துவதை பதிவு செய்து கொள்ள வேண்டும். பணியாளர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் பணியாற்றும்போது விபத்து ஏற்பட்டால் பணியாளர்களே பொறுப்பு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்" என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TNEB Warn to staffs for safety issue