சு.வெங்கடேசன், எஸ்.இராமகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேருக்கு வீடு - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
TN Govt Kanavu Illa Thittam
தமிழக முதல்வரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சு.வெங்கடேசன், எஸ்.இராமகிருஷ்ணன் உள்ளிட்ட 10 தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று கனவு இல்லத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின்படி 2021-22-ம் ஆண்டில் ஆறு எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஓதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, 2022-2023-ம் ஆண்டில் ஜி.திலகவதி, பொன்.கோதண்டராமன், சு.வெங்கடேசன், ப.மருதநாயகம், மறைமலை இலக்குவனார், மருத்துவர் முனைவர் இரா. கலைக்கோவன், எஸ்.இராமகிருஷ்ணன், கா.ராஜன், ஆர்.என்.ஜோ.டி.குருஸ், சி.கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகிய 10 தமிழ் எழுத்தாளர்களுக்கு, அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் வீடுகள் வழங்கப்படும் என்று, தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது.
English Summary
TN Govt Kanavu Illa Thittam