வயதான பெற்றோரை பாசத்துடன் பராமரிக்கும் மகன்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு & சிறப்பு விருது வழங்கிய சிக்கிம் அரசு!
Sikkim Govt Award Parents son love award
பெற்றோர்களை வயது முதிர்ந்த நிலையில் பிள்ளைகள் கவனிக்காமல் வாடவிடும் நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், இதனைத் தடுக்கும் வகையில் சிக்கிம் அரசு ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்தது.
வயதான பெற்றோரை பாசத்துடன் பராமரிக்கும் மகன்கள், மகள்களுக்கு ஊக்கமாக ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சிறப்பு விருது வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி, மாநிலம் முழுவதும் பெற்றோருக்கு அன்பும் அக்கறையும் காட்டிய 199 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சுதந்திர தின விழாவில் ‘ஷ்ரவன் குமார்’ விருதுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
மாநில அரசு, இந்த விருதுகள் குடும்ப பாசத்தை உறுதிப்படுத்தி, குடும்ப பிணைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. பெற்றோரை பராமரிப்பது ஒரு கடமை மட்டுமல்ல, சமூகப் பொறுப்பும் என்பதை மக்களுக்கு நினைவூட்டும் முயற்சியாகவும் இந்த திட்டம் அமைந்துள்ளது.
English Summary
Sikkim Govt Award Parents son love award