பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி! திருநங்கை நமிதா மாரிமுத்துவும் பாஜகவில் இணைந்தார்!
Actress Kasthuri and namita joint to BJP Nainar Nagendran
நடிகை கஸ்தூரி மற்றும் திருநங்கை நமிதா மாரிமுத்து தமிழக பாஜகத்தில் இணைந்துள்ளனர். இந்நிகழ்ச்சி சென்னை கமலாலயத்தில், பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பெப்சி சிவா முன்னிலையில் நடைபெற்றது.
நடிகை கஸ்தூரி, நீண்டகாலமாக சமூக பிரச்சினைகளில் தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்.
அதேபோல், நமிதா மாரிமுத்து ஒரு நடிகையும், சமூக செயற்பாட்டாளரும், Namis South Queen India நிறுவனத்தின் தலைவருமானார். இவர்களின் அரசியல் பயணம் பாஜகவுடன் இன்று தொடங்குகிறது.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கஸ்தூரி மற்றும் நமிதா மாரிமுத்து ஆகியோர் இன்று பாஜகவில் இணைந்ததை வரவேற்பதாகவும், இருவரும் சமூக மற்றும் பொதுநலப் பணிகளில் ஈடுபட்டவர்கள் என்பதால், அரசியலில் இவர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், அவர்களின் அரசியல் பயணம் பாஜகவில் தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.
English Summary
Actress Kasthuri and namita joint to BJP Nainar Nagendran