வழக்கு தொடுத்த தேன்மொழி திமுக நிர்வாகியா? பச்சை பொய் சொன்ன அமைச்சர் சேகர்பாபு - அதிமுக வெளியிட்ட ஆதாரம்!
ADMK Condemn to DMK MK Stalin Sanitary workers protest
அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்த தேன்மொழி யார் தெரியுமா?
திமுக சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகி!
இவர் தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டிருக்கும் “தனம் சாரிடபிள் டிரஸ்ட்” யாருடையது தெரியுமா?
பணி நிரந்தர வாக்குறுதியை நாங்கள் கொடுக்கவே இல்லை என பச்சை பொய் சொன்ன அமைச்சர் சேகர்பாபு உடையது ….
[துணை முதல்வர் உதயநிதி சொல்லியிருக்கிறார்]
இப்போது தெரிந்ததா தூய்மைப் பணியாளர்களை வெளியேற்றியது யார் என்று?
யாருக்கும் தொந்தரவு செய்யாமல், அமைதியாக போராடி வந்த எளிய மக்களின் மீது கரிசனம் கொள்ளாமல் வெறுப்பை உமிழ்ந்து, காட்டில் இரையை வேட்டையாடும் மனோபாவத்தோடு , நரி தந்திரம் செய்து, அவர்களை நடுஇரவில். காவல்துறையை வைத்து அடித்து வெளியேற்றியுள்ளது திமுக!
தூய்மைப் பணியாளர்களை வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு, அவர்களை இடையூறாக கருதிய இந்த திமுக ஆட்சியை மக்கள் குப்பையில் வீசத் தான் போகிறார்கள். அதை நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK Condemn to DMK MK Stalin Sanitary workers protest