CM ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்!
Rajinikanth coolie thanks to CM Stalin EPS Annamalai
ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானதும், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதல் நாள் மற்றும் தொடக்க வசூல் கணக்குகளின்படி, கூலி இதுவரை சுமார் 170 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திரையரங்குகள் பல இடங்களில் ஹவுஸ் ஃபுல் நிலையைச் சந்தித்து வருகின்றன.
இதே நேரத்தில், ரஜினிகாந்த் தனது திரைப்பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக ரசிகர்கள், சக கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்தன. அனைவரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், " அனைவருக்கும் 79வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
English Summary
Rajinikanth coolie thanks to CM Stalin EPS Annamalai