Kiwi Fruit :ஆண்களின் ஆரோக்கியத்துக்கு அதிசய பலன் தரும் கிவி பழம்! அந்த பிரச்சனையே வராது! ட்ரை பண்ணி பாருங்க..! - Seithipunal
Seithipunal


இன்றைய இளைஞர்களில் பலர் மலட்டுத்தன்மை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இதற்குக் காரணமாக ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், மன அழுத்தம், மற்றும் உடற்பயிற்சியின்மை குறிப்பிடப்படுகின்றன. ஆனால் இதை எளிதாக சமாளிக்க உதவக்கூடிய ஒரு இயற்கை தீர்வு நம்மிடம் இருக்கிறது — அதுதான் கிவி பழம்!

பச்சை நிறத்தில் இருக்கும் இந்த சிறிய கிவி, வைட்டமின் சி-யின் மிகச்சிறந்த மூலமாகும். ஒரு கிவி பழத்தில், பிற பழங்களை விட மூன்று மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும் மட்டுமல்லாமல், ஆண்களின் கருவுறுதல் திறனையும் அதிகரிக்கிறது.

இதில் உள்ள ஜிங்க், ஃபோலேட், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள், உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை உயர்த்தி, ஆற்றலை மேம்படுத்துகின்றன. அதோடு, விந்தணுக்களின் உற்பத்தி மற்றும் இயக்கத்தையும் அதிகரித்து கருத்தரிப்பு வாய்ப்பை மேம்படுத்துகின்றன.

NCBI வெளியிட்ட ஆய்வுகளின்படி, கிவியில் உள்ள வைட்டமின் சி மன அழுத்தத்தை குறைத்து, விந்தணுக்களின் தரத்தை சிறப்பாக மேம்படுத்துகிறது.

அதனால், தினமும் ஒன்று அல்லது இரண்டு கிவி பழங்களைச் சாப்பிடுவது, ஆண்களின் உடல் ஆரோக்கியத்தையும், கருவுறுதல் தொடர்பான ஹார்மோன்களையும் இயற்கையாக சமநிலைப் படுத்தும் ஒரு சிறந்த வழியாகும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kiwi Fruit Kiwi fruit is a miracle fruit for men health That problem will not arise Try it


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->