லோகேஷ் கனகராஜின் கூலி படத்தின் முதல்நாள் வசூல்!
coolie Lokesh Kanagaraj Rajinikanth report
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் புதிய திரைப்படம் ‘கூலி’க்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நேற்று உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியான இந்த படம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ரசிகர்களின் அதிரடி வரவேற்பைப் பெற்றுள்ளது. பல திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, காகிதம் பொழிந்து கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனுடன் பல திரைப்பிரபலங்களும் நேரடியாக திரையரங்குகளில் சென்று படத்தை கண்டு மகிழ்ந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகள் இந்த வார இறுதிவரை ஹவுஸ் ஃபுல் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளிலும் கூலி அதிரடியான வசூலை பதிவு செய்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில், மிகக் குறைந்த நேரத்தில் 3 மில்லியன் டாலர் வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
மேலும், உலகளவில் வெளியீட்டின் முதல் நாளிலேயே சுமார் 170 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘கூலி’ தற்போது ரசிகர்களிடையே பெரும் பேச்சுப் பொருளாக உள்ளது.
English Summary
coolie Lokesh Kanagaraj Rajinikanth report