லியோ சாதனையை முறியடிக்காத கூலி! ஆனால்... செம்ம அப்டேட்!
Coolie Leo Vijay vs Rajini
ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. வெளிவருவதற்கு முன்பே பல மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் டிக்கெட் முன்பதிவில் நல்ல வரவேற்பைப் பெற்றதால், முதல் நாள் வசூலில் பெரிய சாதனை படைக்கும் என வர்த்தக நிபுணர்கள் எதிர்பார்த்தனர்.
புக் மை ஷோ தளத்தின் தகவலின்படி, கூலி படத்துக்கான முதல் நாள் முன்பதிவு 7.17 லட்சம் டிக்கெட்களாகும். இது விஜய் நடித்த லியோ படத்தின் முதல் நாள் முன்பதிவு எண்ணிக்கையான 7.51 லட்சத்தை விட குறைவாகும். இதனால், லியோ இன்னும் முதல் நாள் முன்பதிவில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
இருப்பினும், பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் லியோ படத்தின் சாதனைகளை கூலி முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வெளிநாட்டு சந்தைகளில் கூலி படத்திற்கு ரசிகர்கள் அதிக வரவேற்பளித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் கூலி படத்தின் முதல் நாள் வசூல் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. தொழில்நுட்ப வட்டாரங்கள், அந்த வசூல் லியோவின் சாதனையை விட அதிகமாக இருக்கும் என நம்புகின்றன.
English Summary
Coolie Leo Vijay vs Rajini