சினிமா நடிக்க ஆசை... சீரழிக்கப்பட்ட சிறுமி! சிக்கிய பிரபல நடிகை சென்னையில் கைது!
malayalam actor minu muneer arrested
மலையாள நடிகை மினு முனீர், பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் தகவலின்படி, 10 ஆண்டுகளுக்கு முன் மினு முனீர், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 14 வயது சிறுமியை சென்னை அழைத்துவந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அப்போது, அந்த சிறுமி நால்வரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு குறித்து, பாதிக்கப்பட்டவர் 10 ஆண்டுகள் கழித்து சென்னை திருமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறை விசாரணை நடத்தி, கேரளாவில் இருந்த மினு முனீரை கைது செய்து இன்று சென்னை கொண்டு வந்துள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மினு முனீர், தற்போது காவலில் வைக்கப்பட்டு, சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் வகையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, ‘மீ டூ’ இயக்கத்தின் போது, நடிகை மினு முனீர், நடிகர் ஜெயசூர்யா தன்னை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
malayalam actor minu muneer arrested