புகழாரம்! கூலி வெறும் திரைப்படம் அல்ல... ரஜினிகாந்தின் சாம்ராஜ்ய கொண்டாட்டம்...! - கே எஸ் ரவிக்குமார்
Coolie not just movie celebration Rajinikanth empire Ks Ravikumar
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள சிறப்பான தருணத்தை, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் நினைவுகூர்ந்துள்ளார்.

இவர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய, முத்து மற்றும் படையப்பா படத்திலிருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து இதயங்கனிந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதற்காக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டதாவது,"எங்கள் சினிமாவின் நித்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார்,திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.
இன்று கூலி திரைப்படம் வெளியாகியுள்ளது, இது வெறும் திரைப்படமல்ல, இது உங்கள் சாம்ராஜ்யத்தின் கொண்டாட்டம்" என்று பதிவிட்டுள்ளார்.மேலும், 'படையப்பா' மற்றும் 'முத்து' படங்களில் படப்பிடிப்பு நேரத்தில் எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
அவற்றில், ரஜினிகாந்த், கே.எஸ். ரவிக்குமார், மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் கே. பாலச்சந்தர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.ரஜினிகாந்த் – கே.எஸ். ரவிக்குமார் கூட்டணி தமிழ் திரையுலகில் அளித்த வெற்றிகள் ரசிகர்களிடையே மறக்க முடியாதவையாக இன்றும் இருக்கிறது.
இன்று கூலி படம் வெளியாகியதையும், அதன் வெற்றியையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.அத்துடன் பல பிரபலங்கள் திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்து வருகின்றனர்.
English Summary
Coolie not just movie celebration Rajinikanth empire Ks Ravikumar