பேரவலம், பெருந்துயரம்! தமிழகத்தில் கர்ப்பமாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! அதிர்ச்சி ரிப்போர்ட்!
Tamilnadu Minor girls pregnant issue shocking report
தமிழகத்தில் சிறுமிகளின் கர்ப்பம் தொடர்பான புள்ளிவிவரங்கள் கவலைக்கிடம் அளிக்கின்றன. 2014 முதல் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 34,497 பெண்கள் 18 வயதுக்கு முன்பே கருவுற்றுள்ளனர். மதுரை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3,000-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கருவுற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலை, குழந்தைத் திருமணங்கள் இன்னும் நடைபெற்று வருவதை வெளிப்படுத்துகிறது. சிறுவயதில் கர்ப்பம் தரிப்பது உடல் வளர்ச்சியையும், மனநலத்தையும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிறுமிகளுக்கு ஏற்படும் பிரசவ சிக்கல்கள், குறைந்த உடல் எடை கொண்ட குழந்தைகள் பிறப்பு மற்றும் கல்வி நிறுத்தம் போன்ற விளைவுகள் சமூகத்தையே பாதிக்கின்றன.
பெரும்பாலான இடங்களில், குழந்தைத் திருமணங்களை நடத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. குழந்தைத் திருமணத் தடுப்பு சட்டப்படி, 18 வயதுக்கு குறைவான பெண்ணை திருமணம் செய்வோருக்கும், அதை ஏற்பாடு செய்வோருக்கும் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
ஆனால், நடைமுறையில் இந்தச் சட்டம் பல இடங்களில் அமல்படுத்தப்படவில்லை. அதிர்ச்சியளிக்கும் வகையில், சிலர் உயர் கல்வி பெற்றிருந்தும் இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு, விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படாவிட்டால், சிறுமிகளின் உடல்நலம் மற்றும் எதிர்காலம் ஆபத்திலேயே இருக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
English Summary
Tamilnadu Minor girls pregnant issue shocking report