'அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் தகுதியானவர்': இஸ்ரேல் பிரதமர்..!
Israeli Prime Minister says Trump deserves Nobel Peace Prize
'அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் தகுதியானவர்' என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார்.
இன்று அக்டோபர் 10-ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது. நார்வே நாட்டைச் சேர்ந்த ஆஸ்லோ அமைதி ஆய்வு நிறுவனம் யாருக்கு பரிசு வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்யும். இந்நிலையில், இந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் அந்த பரிசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயரை சில நாடுகள் பரிந்துரை செய்துள்ளன.
அத்துடன், டொனால்ட் ட்ரம்ப் அவரே துணைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதாவது, 'இதுவரை ஏழு போர்களை நிறுத்திவிட்டேன். எனக்கு கட்டாயம் நோபல் பரிசு தர வேண்டும். எனக்கு நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு பெரும் அவமானம்' என வெளிப்படையாக கூறியுள்ளார். இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

'அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை கொடுங்கள். அவர் அதற்கு தகுதியானவர்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்படுபவர் பெயர் இன்று அக்டோபர் 10-ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது. அப்போது தனக்கு பரிசு கிடைக்காவிட்டால் அதனை டிரம்ப் எப்படி எதிர்கொள்வார் என்று உலகம் முழுவதும் விவாதம் நடந்து வருகிறது. இதற்கெல்லாம் விடை இன்று மதியம் 03 மணிக்கு தெரிந்து விட கூடும்.
English Summary
Israeli Prime Minister says Trump deserves Nobel Peace Prize