பெற்ற மகளின் தலையை துண்டாக்கிய தந்தை, அண்ணன்! காரணம் கேட்டு அதிர்ந்த உ.பி! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண்ணை குடும்பத்தினர் சேர்ந்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஆகஸ்ட் 10 அன்று சதாபாத் பகுதி பாரதோய் கிராமத்தில், தலையற்ற பெண் உடல் ஒன்று கால்வாய் அருகே சாக்கில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விசாரணைக்காக ஐந்து சிறப்பு குழுக்களை போலீசார் அமைத்து, உடலில் இருந்த அடையாளங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.

அதில், தையல் செய்த உடையை பார்த்து, தையல்கார பெண் ஒருவர் அடையாளம் கண்டு தகவல் அளித்தார். இதன்மூலம், உயிரிழந்தவர் அலிகார் மாவட்ட தவுனா கிராமத்தை சேர்ந்த ஹஸ்ரத் அலி என்பவரின் மகள் தமன்னா என்பது உறுதியானது.

தமன்னா, சமீபத்தில் ஒரு இளைஞருடன் இரண்டு நாட்கள் ஊரை விட்டு வெளியே சென்றிருந்தார். இதை குடும்பத்தினர் அவமானமாகக் கருதி, தந்தை அலி மற்றும் வளர்ப்பு தாய் ராணி கண்டித்தனர். பின்னர், ஆகஸ்ட் 8 அன்று அந்த இளைஞருடன் மீண்டும் புறப்பட்ட தமன்னாவை, தந்தை அலி வழியில் பிடித்து, மாமனார் ராஜா பெஹல்வான் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு மூத்தவர்களின் ஆலோசனையின் பேரில், தமன்னாவை கொலை செய்ய தீர்மானிக்கப்பட்டது. உணவில் மயக்க மருந்து கொடுத்து, பின்னர் தந்தை அலி, மனைவி ராணி உள்ளிட்டோர் சேர்ந்து கழுத்து நெரித்து கொன்றனர்.

அடையாளம் தெரியாமல் இருக்க தலையை துண்டித்து, உடலை பலத்த காயங்களுடன் சாக்கில் கட்டி கால்வாயில் வீசியனர். சம்பவத்தில் தொடர்புடைய அலி, ராணி, ராஜா பெஹல்வான் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UP Tragedy murder love issue


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->