'அநீதிக்கு இணங்கி, அடிபணிந்து ஒப்புக்கொள்வதை விட, அடங்காமல் இருப்பது மிகவும் நல்லது': சசி தரூர்..!
Shashi Tharoor says that it is better to be submissive than to submit or agree
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிகின்ற நிலையில், விவசாயம் உள்ளிட்ட சில சந்தைகளை திறந்து விடும்படி அமெரிக்கா கூறுவதை இந்தியா ஏற்கவில்லை. இந்நிலையில், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதிக்க இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், நாளை ட்ரம்ப் மற்றும் புடின் இடையே அலஸ்க்காவில் நடக்கும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் இந்தியா மீது மேலாதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெஸ்ஸன்ட் கூறுகையில், அமெரிக்க சிறந்த நிலையில் இருக்கிறதாகவும், பெரிய வர்த்தக ஒப்பந்தம் இதுவரை செய்யவில்லை என்றும், ஒப்புக்கொள்ளப்படவில்லை. சுவிட்சர்லாந்துடன் செய்ய வேண்டி உள்ளது. இந்தியா அடங்க மறுக்கிறது, எனத் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பில், முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரஸின் சசி தரூர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியா அடங்க மறுப்பதாக சிலர் சொல்வதை கேள்விப்படுகிறேன். அநீதிக்கு இணங்கி, அடிபணிந்து அல்லது ஒப்புக்கொள்வதை விட, அடங்காமல் இருப்பது மிகவும் நல்லது என்று நான் சொல்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Shashi Tharoor says that it is better to be submissive than to submit or agree