சீனாவில் இறந்து போன செல்லப்பிராணிகளிடம் பேச, அவை மறுபிறவி எடுத்துள்ளதா..? என்பதை கண்டுபிடிக்க பணம் வசூலித்த கும்பல்: அடுத்து நடந்த அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


உலகில் பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய், பூனை, பறவைகள் உள்ளிட்ட செல்ல பிராணிகள்   குடும்பத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிடுகின்றன. இவ்வாறு வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் திடீரென உயிரிழக்கும் போது, அதன் உரிமையாளர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி விடுகின்றனர். அதன் துயரத்தில் இருந்து மீள முடியாமலும் தவித்து வருகின்றனர்.

அவ்வாறு துயரத்தில் வாடும் உரிமையாளர்களை குறிவைத்து பணம் பறிக்கும் கும்பல் ஒன்று சீனாவில் இயங்கியுள்ளது. இந்த மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் இதற்காக பல்வேறு குழுக்களை நடத்தி வருவதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இந்த மோசடி கும்பல், செல்லப்பிராணிகளை இழந்து வாடும் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் ஆதரவாக பேசியதுடன், 'இறந்துபோன செல்லப்பிராணிகளின் ஆன்மாவிடம் பேசி 05 கேள்விகள் கேட்க வேண்டுமா..? என கேட்டுள்ளனர். அன்பாகவும், ஆசையாகவும் வளர்த்த செல்லப்பிராணி இறந்த துக்கத்தில் இருப்பவர்கள் அதற்கு சம்மதித்தவுடன்,  அதற்கு 128 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,500) செலவாகும் என்று கூறியிருக்கின்றனர்.

அத்துடன், இறந்துபோன செல்லப்பிராணிகளிடம் தொடர்ந்து, 06 மாதங்கள் வரை பேச வேண்டும் என்றால், அதற்கு 2,999 யுவான் (சுமார் ரூ.36,800) என்றும், இறந்துபோன செல்லப்பிராணி மறுபிறவி எடுத்துள்ளதா? என்பதை கண்டறிய 1,899 யுவான் (சுமார் ரூ.22,800) வரை வசூல் செய்திருக்கின்றனர்.

தங்கள் செல்லப்பிராணிகளிடம் எப்படியாவது பேச வேண்டும் என்று ஏக்கத்தில் இருக்கும் உரிமையாளர்கள் பலர், இந்த மோசடி வலையில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.

இவ்வாறு செல்லப்பிராணி இறந்து துக்கத்தில் வாடும் நபர்களை, மோசடிக்காரர்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்ட பதிவுகளை பார்த்துவிட்டு, அந்த தகவல்களை சேகரித்துக் கொள்கின்றன. பின்னர் உரிமையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்றவாறு பதிலளிப்பது என்பது குறித்து விடைகள் தயாரித்து, செல்லப்பிராணிகள் பதிலளிப்பது போல் சித்தரிக்கின்றனர். ஒரு கட்டத்தில் இதனை மோசடி என்று உணர்ந்த சிலர், காவல்துறையினரிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் சீனாவின் சமூக வலைதளங்களில்வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fraudster gang in China charged money to talk to dead pets to find out if they have been reincarnated


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->