பாஜக-வின் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேஷ் கெலாட் காலமானார்..! - Seithipunal
Seithipunal


பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேஷ் கெலாட் 60 வயதில் இன்று காலமானார். மேற்கு டெல்லிக்கு உட்பட்ட மதியாலா தொகுதிக்கான முன்னாள் எம்.எல்.ஏ.வான ராஜேஷ் கெலாட் மறைவு செய்தியை பற்றி அறிந்ததும் மருத்துவமனை மற்றும் அவருடைய வீட்டுக்கு ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா, மேற்கு டெல்லி எம்.பி. கமல்ஜீத் ஷெராவத், டெல்லி அரசின் மந்திரி பர்வேஷ் சாஹிப் சிங் சிங் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க சென்றுள்ளனர்.

பா.ஜ.க.வின் கொள்கை மற்றும் தேசியவாதம் ஆகியவற்றை மேற்கு டெல்லியில் பரப்புவதில் கெலாட் முக்கிய பங்காற்றியுள்ளார். அத்துடன், துவாரகாவில் பெரிய அளவில் ராமலீலா நிகழ்ச்சியையும் அவர் தொடங்கியபோது, அதில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். அவருடைய இறுதி சடங்கு நவாடா பகுதியில் நாளை நடைபெறும் என டெல்லி பா.ஜ.க. வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former BJP MLA Rajesh Gehlot passed away


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->