டிவால்ட் பிரேவிஸின் அதிரடி.. புதிய ஐ.சி.சி. டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் 80 இடங்கள் முன்னேறி அசத்தல்..! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே 03 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 02 போட்டிகள் முடிவடைந்த நிலையில், தொடர் 1-1 கணக்கில் சமநிலையில் உள்ளது. இதில் வீரர்களின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டி20 போட்டிகளில் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

அதன்படி, பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் ஷர்மா முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு டி20 தொடரில் சொதப்பி வரும் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 02-இல் இருந்து 04-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இதன் காரணமாக 03-வது இடத்தில் இருந்த இந்தியாவின் திலக் வர்மா 02-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்தின் பில் சால்ட் 03-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளார். இந்த தரவரிசை படி, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 06-வது இடத்தில் உள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 02-வது டி20 போட்டியில் 125 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் மற்றும் சென்னை அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் டிவால்ட் பிரேவிஸ், 80 இடங்கள் அதிரடியாக முன்னேறி  21-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் 06 இடங்கள் உயர்ந்து 10-வது இடத்தை பெற்றுள்ளார்.

தொடர்ந்து, பந்து வீச்சாளர் தரவரிசையில் நியூசிலாந்தின் ஜேக்கப் டப்பி, இங்கிலாந்தின் அடில் ரஷித், வெஸ்ட் இண்டீசின் அகீல் ஹூசைன், இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி, ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா ஆகியோர் முதல் 05 இடங்களில் மாற்றமின்றி தொடர்கின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dewalt Brevis has jumped 80 places in the new ICC T20I batsmens rankings


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->