நண்பன் என்பதால் திமுக அமைச்சர் வெற்றிக்காக நான் உதவி செய்கிறேனா? கொந்தளித்த அதிமுக எம்எல்ஏ! - Seithipunal
Seithipunal


அதிமுக புவனகிரி எம்எல்ஏ அருள் மொழித்தேவன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், கரிசன கணேசன்... கண்டுகொள்ளாத அருண்மொழித்தேவன்! கடலூர் மாவட்ட அரசியல் கணக்குகள் என்ற தலைப்பில் இந்து தமிழ் நாளிதழ் ஒரு தவறான செய்தியை தங்களுடைய செய்தித்தாளிலும், சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார்கள்.

அந்த செய்தியில், அ.இ.அண்ணா தி.மு.கழக ஆட்சியில் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு எதுவுமே செய்யாதது போலவும், திமுக சட்டமன்ற உறுப்பினர் அமைச்சராக உள்ள திரு கணேசன் அவர்கள் தொகுதிக்கு நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
களத்திற்கு செல்லாமல், மக்கள் மனநிலை அறியாமல் முழுக்க உண்மைக்கு மாறான செய்தியை இந்து தமிழ் பிரசூரம் செய்துள்ளது. மேலும் அந்த செய்தியில், 

“கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலா​ளரான அருண்​மொழித்​தேவனும், கணேசனும் பள்ளித் தோழர்கள் என்ப​தால் பரஸ்​பரம் ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் நடத்து​வ​தில்லை என்கிறார்​கள்” என்ற வடிகட்டிய பொய்யையும் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

அருண்மொழிதேவனுக்கு வயது 57, கணேசனுக்கு வயது 66. இருவரும் ஒரே பள்ளியில் கூட படித்தது இல்லை என்பதே உண்மை. 

அ.இ.அண்ணா தி.மு.கழக ஆட்சியில் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் 2011 முதல் 2021 வரை, 10 ஆண்டுகளில் மட்டும் செய்த சாதனைகள் பட்டியல், அப்போது கொண்டுவரப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள இரு முக்கிய திட்டங்கள் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உருப்படியாக எந்த திட்டங்களும் திட்டக்குடி தொகுதியில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

திட்டக்குடி தொகுதி அ.இ.அண்ணா தி.மு.கழகத்தின் கோட்டை என்பதற்கு 14.7.2025 அன்று திட்டக்குடியில் நடைபெற்ற புரட்சித்தமிழரின் எழுச்சிப் பயணம் நிகழ்ச்சியே சாட்சி.

TamilTheHindu போன்ற தரமான பத்திரிக்கை, எவரையோ திருப்தி படுத்த அறையில் அமர்ந்து எழுதப்பட்ட தரமற்ற, உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடாமல் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK MLA Condemn to some fake News DMK Minister


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->