வருங்கால கணவர் தாக்கியதால் நிச்சயதார்த்தத்தை நிறுத்திய பிரபல நடிகை; கொடுமைப்படுத்தும் கணவருடன் பெண்கள் வாழ வேண்டாம் எனவும் பேட்டி..!
Interview with famous actress Ngozi Nwosu who called off her engagement after her fiance attacked her
திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தன்னை வருங்காலக் கணவர் அடித்ததால், தனது திருமணத்தையே நிறுத்தியதாக பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ளார்.
நைஜீரியாவின் புகழ்பெற்ற மூத்த திரைப்பட நடிகையான கோஸி நவ்சு, சமீபத்தில் ‘டாக் டு பி’ என்ற நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: 'குடும்ப வன்முறைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். காதலில் துரோகத்தைக் கூட மன்னிக்கலாம், ஆனால், உடல் ரீதியான துன்புறுத்தலை ஒருபோதும் மன்னிக்க முடியாது.' என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெண்களின் பாதுகாப்புக்கே முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் தனது திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, நிச்சயதார்த்தத்தை நிறுத்தியதாக தெவிடுத்துள்ளார். அதாவது, அவரது வருங்காலக் கணவர் தன்னை மிகக் கொடூரமாகத் தாக்கியதால் திருமணத்தை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

ஏனெனில், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அவருடன் வாழ்நாள் முழுவதும் வன்முறையைச் சகித்துக் கொண்டு வாழ முடியாது என்பதை உணர்ந்து, திருமணத்தை நிறுத்தும் கடினமான முடிவை எடுத்ததாக உருக்கமாக பேசியுள்ளார்.
மேலும், ஒரு ஆண் உங்கள் மீது ஒருமுறை கை வைத்து விட்டால், அவர் அதை ஒருபோதும் நிறுத்த மாட்டார். கொடுமைப்படுத்தும் கணவருடன் பெண்கள் வாழ வேண்டாம். என்றும் வலியுறுத்தியுள்ளார். திருமணம் என்பது 'வாழ்வா, சாவா' போராட்டம் அல்ல என்பதைப் பெண்கள் உணர வேண்டும் என்றும், வன்முறையில் இருந்து விலகி பெண்கள் தங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமாய் அளிக்கவேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
English Summary
Interview with famous actress Ngozi Nwosu who called off her engagement after her fiance attacked her